எங்க போனாலும் இங்கதான் வரனும்... தங்க தமிழ்செல்வனால் விரக்தியில் தினகரன்!
தங்க தமிழ்செல்வன் கட்சி மாறுவதாக வெளியாகிய தகவல் குறித்து டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் மாற்றாக இருப்பார் என்று கருதப்பட்ட டிடிவி தினகரனின் அமமுக கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி வந்த நிலையில் தேர்தலின் படுதோல்விக்கு பின்னர் தினகரன் மீது நம்பிக்கை வைத்திருந்த ஒருசிலரும் அவரை விட்டு விலக முடிவு செய்துவிட்டனர்.
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக அல்லது திமுகதான், இந்த இரண்டு கட்சிகளை தவிர வேறு கட்சிகள் எடுபடாது என்பதை புரிந்து கொண்ட டிடிவி தினகரனின் கட்சியினர் திமுக, அதிமுக என கட்சி மாற தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் டிடிவி தினகரனின் வலது கரமாக இருந்த தங்க தமிழ்ச்செல்வனும் அதிமுகவுக்கு செல்ல தயாராகிவிட்டார். அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்க அதிமுக தரப்பு ஒப்புக்கொண்டதால் விரைவில் அவர் முதல்வர் ஈபிஎஸ் முன் அதிமுகவில் இணைவார் என்று செய்திகள் வெளியானது.
இது குறித்து தினகரனிடம் கேட்ட போது அவர் பதில் அளித்தது பின்வருமாறு, எங்களை லெட்டர்பேட் கட்சி என்று விமர்சிப்பவர்கள் எங்களது கட்சியினரை பொய் சொல்லி ஏமாற்றி அவர்களது கட்சியின் இணைக்கின்றனர். ஆனால், அவர்கள் மீண்டும் எங்களது கட்சிக்கே வந்துவிடுகின்றனர் என தெரிவித்தார்.
தினகரனின் இந்த பதில் குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது. தங்க தமிழ்செல்வனின் நகர்வு என்ன என்பதையும் கணிக்க முடியவில்லை.