ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (11:51 IST)

நம்மை திசை திருப்ப பாக்குறாங்க! சிக்கிடாதீங்க! – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள மு.க.ஸ்டாலின் திசை திருப்ப நினைப்பவர்களிடம் சிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் சில திமுக பிரபலங்களும் பாஜகவில் இணைய போவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில் நாளை திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட உள்ளது. கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் “திமுக தொண்டர்கள் நெருக்கடிகளை கண்டு அஞ்சாமல், திசைத்திருப்புதல்களில் சிக்காமல் இருக்க வேண்டும். நமது கொள்கை பாதையில் வலிமையுடன் பயணித்து, மக்களின் பேராதரவோடு இதை வெற்றி பயணமாக்கிடுவோம்” என கூறியுள்ளார்.