திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜனவரி 2019 (22:23 IST)

அதிமுகவின் இன்னொரு கட்சிதான் திமுக: தம்பிதுரை

கடந்த சில நாட்களாகவே அதிமுக தலைவர்களின் கருத்து ஒன்றாக இருக்கும்போது தம்பித்துரை எம்பியின் கருத்து மட்டும் வித்தியாசமாக உள்ளது, பாஜகவுடன் கூட்டணி வைக்க முதல்வர், துணை முதல்வர் உள்பட அதிமுக அமைச்சர்கள் பலரும் ஆர்வம் காட்டும் நிலையில் தம்பிதுரை மட்டும் பாஜகவை கடுமையாக விமர்சிப்பதோடு, பாஜகவை கூட்டணியில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்று கூறினார். மேலும் அவர் தனிக்கட்சி தொடங்கவிருப்பதாகவும் வதந்தைகள் பரவின
 
இந்த நிலையில் அதிமுகவின் இன்னொரு கட்சி தான் என்றும், அதிமுகவில் இருந்து கோபத்தில் சென்றவர்கள் தான் தற்போது திமுகவில் அதிகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதுபோல் செந்தில் பாலாஜி உள்பட பலர் அதிமுகவில் இருந்தவர்கள் தான் தற்போது திமுகவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பாஜக - அதிமுக கூட்டணி குறித்து எந்த இடத்திலும் இரு கட்சிகளுமே கூறியதில்லை என்றும் இப்போது மட்டும் அந்த கேள்வி எழுவதற்கு என்ன காரணம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சி தமிழகத்திற்கு ஏதாவது நல்லது செய்திருக்கிறதா? பின் எப்படி அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.