ஞாயிறு, 3 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 15 செப்டம்பர் 2022 (19:12 IST)

இனி 60 ஆண்டுகள் திமுக ஆட்சிதான்: அமைச்சர் துரைமுருகன் தகவல்!

duraimurugan
இனி 60 ஆண்டுகள் திமுக ஆட்சிதான் என்றும் 60 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் பயம் இல்லை என்றும் அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார் 
 
விருதுநகரில் இன்று புதிய கலெக்டர் அலுவலக கட்டிட தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதல்வர் முக ஸ்டாலின் அமைச்சர் துரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
 
இந்த விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன் கருத்து வேறுபாடுகளை தாண்டி பிரதமர் மோடியின் நன் மதிப்பை பெற்றவர் நமது நமது முதல்வர் முக ஸ்டாலின் துரைமுருகன் தெரிவித்தார்
 
மேலும் தமிழகத்தில் 60 ஆண்டு காலத்திற்கு திமுக ஆட்சிதான் என்றும் திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் எந்தவித பயமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது