ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (09:43 IST)

காங்கிரஸுக்கான தொகுதிகள் எவை ?- இன்று வெளியாகிறது திமுக தொகுதி ஒதுக்கீடுப் பட்டியல்

திமுக கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் எவை என்பது குறித்த விரிவான பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு சம்மந்தமான அனைத்து விஷயங்களும் உறுதியாகியுள்ள நிலையில் இப்போது தொகுதி ஒதுக்கீடு சம்மந்தமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் காங்கிரஸ் தவிர மற்ற எல்லாக் கட்சிகளுக்குமான தொகுதிகள் எவை என்பது குறித்து ஒப்பந்தம் முடிவாகி கையெழுத்தாகியுள்ளது.

இன்னும் காங்கிரஸுக்கான 10 தொகுதிகள் எவை என்பது மட்டுமே நிலுவையில் உள்ளது. இன்று ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தை ஒட்டி இன்று தமிழகம் வருகைத் தரவுள்ளார். அதனால் இன்றே தொகுதிகள் ஒதுக்கீடு முடிந்து அந்தப் பட்டியல் ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கியுள்ள நிலையில் காங்கிரஸ் கேட்கும் சில தொகுதிகளை கொடுப்பதில் திமுக தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. அதனாலேயே இன்னமும் இழுபறி இருப்பதாகத் தெரிகிறது.

ராகுல் வருகைக்காக நேற்று முதல் குமரி மாவட்டத்தில் தங்கி களப்பணியில் ஈடுபட்டு வரும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி இன்று சென்னை வந்து அதற்கானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறார் எனத் தெரிகிறது. அதனால் இன்று மாலைக்குள் திமுக கூட்டணிக்குள் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.