Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருப்ப மனு கட்டணத்தை திரும்ப பெறலாம்..

Written By Arun Prasath
Updated: வெள்ளி, 22 நவம்பர் 2019 (08:54 IST)
மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெறலாம் என திமுக அறிவித்துள்ளது.

வருகிற உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதாவது மக்கள் இம்மூவரையும் தேர்ந்தெடுக்கமுடியாது. வார்டு கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கமுடியும்.

இந்த அறிவிப்பை எதிர்த்து பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னதாக அதிமுக, தனது கட்சியில் மேயர், நகராட்சி, பேரூராட்சி ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் தங்களது பணத்தை திரும்ப பெறலாம் என அறிவித்தது.

அதிமுகவை தொடர்ந்து தற்போது திமுகவும் அம்மூன்று பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெறலாம் என அறிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

நான்கு மாதங்களில் அரசுக்கு ரூ.20,000 கோடிக்கும் மேல் கூடுதல் வருமானம்.. தவெக அரசு சாதனை...

வரலாற்று சிறப்புமிக்க ரூ.15,300 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள்.. முதல்வர் விஜய் சாதனை...

அன்பில் மகேஷ் கைப்பற்றப்பட்டவை என்னென்ன? அரசு தரப்பு விளக்கம்...

பிரதமர் மோடி நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ வேண்டும்: முதல்வர் விஜய் வாழ்த்து

17 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் மதுரை மீனாட்சி கோவில் குடமுழுக்கு விழா.. அமைச்சர் ரமேஷ் பெருமிதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments