Daily Horoscope
✕

தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!.. திமுகவின் சைலண்ட் ஆப்பரேஷன்...

Updated: புதன், 28 அக்டோபர் 2026 (15:13 IST)
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறினார். அதிமுக பலவீனமாக இருக்கும் நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் நமக்குதான் வெற்றி என முக ஸ்டாலின் நம்பியிருந்தார்.

ஆனால் அவரே எதிர்பார்க்காத படி இரண்டு வருடங்களுக்கு முன்பு கட்சி தொடங்கி தேர்தலில் தனித்து போட்டியிட்ட நடிகர் விஜய் 108 தொகுதிகளில் வெற்றியை பெற்று ஆட்சியைப் பிடித்து முதலமைச்சராகிவிட்டார். அதோடு கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முக ஸ்டாலின் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்..

இந்நிலையில், நவம்பர் 13ம் தேதிக்கு பிறகு அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர முடியும் என்பதால் ஆளும் தரப்பு எம்.எல்.ஏக்களையே ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க வைக்கும் ஆபரேஷனை திமுக கையில் எடுத்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் 25 தவெக எம்.எல்.ஏக்களை கண்டறிந்து அவர்களிடம் பேசியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒருபக்கம் மூன்றில் இரு பங்கு அதிமுக எம்.எல்.ஏக்களை தவெகவுக்கு ஆதரவாக கொண்டுவர வேலுமணி டீமும் களமிறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

அஇபுதமமுக பொதுச்செயலாளர் பதவிலிருந்து சசிகலா நீக்கம் - நடந்தது என்ன?..

4 வழிகளில் வேலைநீக்க நடவடிக்கையை எடுக்கும் முன்னணி நிறுவனங்கள்.. எப்போது வேண்டுமானாலும் வேலை போகலாம்..

ஆங்கிலம் தப்பாக பேசியதால் தாஜ் ஓட்டல் வெயிட்டரை அறைந்த வாடிக்கையாளர்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்...

ரயிலில் சார்ஜ் செய்ய புதிய கட்டுப்பாடுகள்!.. காரணம் இதுதான்!..

சேகர்பாபு மீது வழக்குப்பதிவு! - ரவுண்டு கட்டி அடிக்கிறாங்களே!..

அடுத்த கட்டுரையில்
Show comments