1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. udhyanidhi stalin post about tvk government

டம்மி முதல்வரின் சாதனை!.. மூடர் கூட்ட ஆட்சி!.. உதயநிதி பதிவு!..

udhyanidhi vijay
எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தளங்களில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டிருக்கிறார்.

தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடும் அளவுக்கு சீர்கெட்டு போய் இருக்கும் இந்த மூடர் கூட்ட ஆட்சியை வன்மையாக கண்டிக்கிறேன். சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு அந்த 17 கைதிகளும் தப்பி இருக்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சிறைத்துறை எந்த அளவுக்கு சீரழிந்து போயுள்ளது என்ற கேள்வி எழுகிறது?

சமீபத்தில் புழல் மத்திய சிறைக்கு ஆய்வுக்குப் போன முதலமைச்சர், அதனடிப்படையில் எடுத்த நடவடிக்கை என்ன?  தமிழ்நாடெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஏதேனும் உத்தரவுகளை பிறப்பித்தாரா? ஒரு பக்கம் குழந்தைகள் வீட்டிலிருந்து மாயம் - மறுபக்கம் கைதிகள் சிறையில் இருந்து ஓட்டம் என்று Lawlessness-ன் அடையாளமாக ஆட்சி நடத்துவது தான் இந்த dummy முதலமைச்சரின் சாதனை.

தப்பித்த கைதிகள் அனைவரையும் உடனே பிடிப்பதோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும் என்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
முதல் வகுப்பு சிறை!.. என்னென்ன வசதிகள்?.. வாங்க பார்ப்போம்!...