வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 9 மார்ச் 2024 (20:05 IST)

திமுக 21 தொகுதிகளில் போட்டி: காங்.,க்கு எத்தனை தொகுதிகள்? ஒப்பந்தம் கையெழுத்து!

dmk -congress
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் இறுதிசெய்யப்பட்டுள்ளது.
 
விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும்,   திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட  மாநில கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு,  வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளனர்.
 
பல கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்ட  நிலையில்,  காங்கிரஸ் கட்சி சமீபத்தில்  மக்களவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதியை அறிவித்தது. அதன்பின், நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது.
 
இந்த நிலையில், தமிழ் நாட்டில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.
 
இந்த  நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்
 
சென்னை சத்யமூர்த்தி பவனின் நடைபெறும் இந்த ஆலோசனையில் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் பொதுச்செயளாளர் கே.சி. வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் உள்ளிடோர் பங்கேற்றுள்ளனர். இன்றிரவுக்குள் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் எனவும், இன்னும் சற்று   நேரத்தில் இரு கட்சிகளிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியானது.
 
இந்த  நிலையில், காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இதுபற்றி பேசவுள்ளதாக கூறப்பட்ட  நிலையில், இரு கட்சி தலைவர்களும் சந்தித்து தொகுதிப் பங்கீடு பற்றி பேசி கைழுத்தாகியுள்ளது.
 
அதன்படி, மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கூறியதாவது: பாண்டிச்சேரி உட்பட 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
எனவே  மக்களவை தேர்தலில்  திமுக மொத்தம் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 9 மற்றும் புதுச்சேரி, விசிக , சிபிஐ,  சிபிஎம் தலா 2 தொகுதிகளிலும், ஐயுஎம்எல் ,கொமதேக, மதிமுக தலா 1 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.