திமுக வேட்பாளருக்கு கொரோனா: சென்னை மருத்துவமனையில் அனுமதி!
திமுக வேட்பாளருக்கு கொரோனா: சென்னை மருத்துவமனையில் அனுமதி!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் குறிப்பாக தேர்தல் நடைபெறுகிறது என்பதால் பிரச்சாரம் காரணமாக தனிமனித இடைவெளியை பலர் கடைப் பிடிக்கவில்லை என்பதால் கொரோனா மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பொதுமக்களுக்கு மட்டுமன்றி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கும் இருந்து வருகிறது என்பதும், ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரும், தேமுதிக வேட்பாளர் ஒருவரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் இருவருக்கும், அமமுக வேட்பாளர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது திமுக வேட்பாளர் ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் பிரச்சாரத்தை நிறுத்தி உள்ளார் என்பதும் அவரது சார்பில் திமுகவினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது