செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2024 (18:47 IST)

தேர்தல் பத்திரம் மூலம் திமுக, அதிமுக வாங்கிய தொகை எவ்வளவு?

eps stalin
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வாங்குவது சட்டவிரோதம் என்று அதிரடியாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்த நிலையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார். அதேபோல் இந்த தீர்ப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இதே திமுக மற்றும் அதிமுக தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு தொகை நன்கொடை வாங்கி உள்ளது என்ற தகவல் இணையத்தில் கசிந்து வருகிறது. 
தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக 431 கோடியும், அதிமுக 6 கோடியும் நிதி வாங்கி உள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சி 112 கோடி, ஒ எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி 330 கோடி, பிஜு ஜனதா தளம் 62 கோடி, டிஆர்.எஸ் கட்சியை 383 கோடி தேர்தல் பத்திரம் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் நன்கொடையாக பெற்றுள்ளன. 
 
இதே கட்சிகள் தான் இன்று தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வாங்கியது சட்டவிரோதம் என்ற தீர்ப்புக்கு ஆதரவளித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran