திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2024 (18:35 IST)

அரக்கோணம் தொகுதி ஜெகத்ரட்சகனுக்கு கிடையாதா? திமுக வேட்பாளர் யார்?

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரை இருக்கும் நிலையில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த முறை அவருக்கு வாய்ப்பு கிடையாது என்று கூறப்படுகிறது 
 
அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்று ஆலோசனை நடந்த நிலையில் ஏவி சாரதி என்பவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது 
 
சிமெண்ட் மொத்த வியாபாரம் செய்யும் இவர் திமுகவின் ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளராக இருந்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் என்றும் திமுக தலைமைக்கு நெருக்கமாக இருந்து வருவதால் இவர் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் என்பவரும் அரக்கோணம் தொகுதியை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி ஜெகத்ரட்சகன் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் திமுக தலைமை இந்த தொகுதியில் யாரை வேட்பாளராக தேர்வு செய்யும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva