புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (21:49 IST)

திமுகவின் 100 நாள் ஆட்சி நன்றாக உள்ளது. பிரேமலதா

திமுகவின் 100 நாள்கள் ஆட்சி நன்றாகவும் நடுநிலையுடன் உள்ளதாக தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
திமுக ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் ஆனதை அடுத்து அந்த ஆட்சியின் சாதனைகள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. திமுகவின் 100 நாள் ஆட்சியை அதிமுக உள்பட ஒருசில கட்சிகள் குறை கூறினாலும் பெரும்பாலான கட்சிகள் நல்ல விமர்சனத்தை தந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா அவர்கள் திமுகவின் 100 நாள் ஆட்சி குறித்து கூறிய போது திமுக ஆட்சியில் நன்றாகவும் நடுநிலையோடு உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார் கடந்த தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் இணையாமல் இருந்த நிலையில் வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது