Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவெகவை காட்டி பேரம் பேசும் காங்கிரஸ், தேமுதிக, பாமக?!. அதிர்ச்சியில் திமுக!...

Written By BALA
Updated: வியாழன், 5 பிப்ரவரி 2026 (10:16 IST)
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு பேசுவது, வேட்பாளர்களை நியமிப்பது என தேர்தல் வேலைகளில் வேகம் காட்டி வருகிறார்கள்.

முதலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதுதான் முக்கியம், அந்த வகையில் அதிமுக ஏற்கனவே பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துவிட்டது. அந்த கட்சியில் அன்புமணி பாமக, டிடிவி தினகரனின் அமமுக உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்திருக்கின்றன..

திமுகவை பொறுத்தவரை ஏற்கனவே அந்த கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தை போன்ற கட்சிகள் இந்த முறையும் கூட்டணி நீடிக்கும் என தெரிகிறது. காங்கிரஸ் இதுவரை எந்த முடிவையும் சொல்லவில்லை. ஏனெனெனில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக தொகுதிகள், உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீதம் என அந்த கட்சி டிமாண்ட் வைக்கிறது. ஒருபக்கம் சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளும் தனித்து போட்டியிடும் என தெரிகிறது. ஏனெனில் விஜயின் தவெகவுடன்  இதுவரை எந்த கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை.

ஒருபக்கம் காங்கிரஸ், தேமுதிக, டாக்டர் ராமதாஸ் பாமக ஆகிய கட்சிகள் தொடர்ந்து திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இந்த மூன்று கட்சிகளும் இதுவரை எந்த கூட்டணியிலும் இணையவில்லை.. இந்த மூன்று கட்சிகளுமே திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது ‘நாங்கள் கேட்பதை நீங்கள் கொடுக்கவில்லை என்றால் பரவாயில்லை.. நாங்கள் தவெக பக்கம் போவோம்’ என சொல்லி வருவதாக செய்திகள் கசிந்திருக்கிறது.

இந்த கட்சிகள் தவெக பக்கம் போய் விடக்கூடாது என்பதில் திமுக தலைமை உறுதியாக இருக்கிறதாம். எனவே அந்த கட்சிகளிடம் தொடர்ந்து பேரம் பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.<>

எல்லாம் காட்டு

இண்டர்வியூவுக்கு வர முடியாது.. வேலைக்கு விண்ணபித்த இளைஞரின் மெசேஜால் பரபரப்பு..

20 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா வரும் தஸ்லிமா நஸ்ரின்.. மேற்கு வங்க பாஜக அரசு வரவேற்பு..

எதிர்ப்பு காட்டிய திமுக!.. அந்த காட்சியை நீக்கிய பரிதாபங்கள் டீம்!..

கர்நாடகாவில் விஜய்யின் ஜனநாயகன் பேனரை கிழித்த கன்னடர்கள்.. தண்ணீர் திறக்க சொன்ன உத்தரவுக்கு எதிர்ப்பு..!

விஜய் போன்ற முதல்வர் எங்களுக்கு வேண்டும்.. விஜய்யே வந்தாலும் சந்தோஷம் தான்.. பீகார் விவசாயிகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments