எம்.எல்.ஏக்களின் பதவியை காலி செய்வதுதான் தினகரனின் நோக்கம் - திவாகரன் பேட்டி

வெள்ளி, 15 ஜூன் 2018 (16:51 IST)
18 எம்.எல்.ஏக்களின் பதவி பறி போக வேண்டும் என்பதுதான் தினகரனின் நோக்கம் என சசிகலாவின் சகோதரர் பேட்டியளித்துள்ளார்.

 
பெரிது எதிர்பார்க்கபப்ட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.    இதனால், 3வதாக ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டு அவர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த திவாகரன் “18 எம்.எல்.ஏக்களின் பதவி பறி போக வேண்டும் என்பதுதான் தினகரன் நோக்கம். ஆனால் தீர்ப்பு வேறு மாதிரி வந்து விட்டது. இந்த தீர்ப்பு தினகரனுக்கு கிடைத்த சம்மட்டி அடி. 3வது நீதிபதியின் தீர்ப்பு வெளியான பின் இந்த வழக்கு முடிவிற்கு வரும்” என அவர் தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

தத்துவம் இல்லாத அரசியல்!.. உங்களை கொன்னு கூட அவன் ஜெயிப்பான்!.. இளவரசு யாரை சொல்றாரு!..

தவெகவுடன் கூட்டணி!.. பக்கா பிளான் போடும் என்.ஆர்.ரங்கசாமி!.. நடப்பது என்ன?..

திமுகவில் இணைய ரூ.500 கோடி பேரம்: ஆடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு தவெக எம்எல்ஏ அதிரடி புகார்!

போதைப்பொருளுக்கு எதிரான சிறப்பு வேட்டை: மூன்றே நாட்களில் 621 பேர் கைது! 296 கிலோ கஞ்சா பறிமுதல்..

தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு போட்ட கேரள காங்கிரஸ் அரசு.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments