புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 4 அக்டோபர் 2017 (07:07 IST)

ஓடி ஒளியும் தினகரன்: கைது நடவடிக்கை எப்போது?

சுப்ரீம் கோர்ட் தடையை மீறி, மருத்துவ கல்விக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை தூண்டியதாக தினகரன் உள்பட 13 பேர் மீது கூட்டு சதி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக செயல்படுதல், வன்முறையை துாண்டும் வகையில் நடந்து கொள்ளுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய சட்டப் பிரிவுகளில் சேலம் அருகேயுள்ள அன்னதானப்பட்டி போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



 
 
இந்த வழக்கின் அடிப்படையில் தினகரன் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் தினகரனும் அவரது ஆதரவாளர்களும் ஓடி ஒளிந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவ்வப்போது தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்து வந்தபோதிலும் அவர்தனது இருப்பிடத்தை மாற்றி மாற்றி வருவதாகவும், இருப்பினும் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்'
 
தினகரனை கைது செய்து முடக்கிவிட்டால் இரட்டை இலை பிரச்சனை, ஆட்சிக்கு ஆபத்து என்ற பிரச்சனைகளை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நினைப்பதாகவும் அது ஒருபோதும் நிறைவேறாது என்றும் தினகரன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.