Daily Horoscope
✕

கடிதம் அனுப்பிய சசிகலா: அவசரமாக ஆலோசனை கூட்டம் நடத்திய தினகரன்!

கடிதம் அனுப்பிய சசிகலா: அவசரமாக ஆலோசனை கூட்டம் நடத்திய தினகரன்!

Written By Caston
Updated: வெள்ளி, 17 நவம்பர் 2017 (12:06 IST)
தமிழகத்தில் சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை மெகா ரெய்டை நடத்தி முடித்திருக்கிறது. இந்த சோதனைக்கு பின்னர் வருமான வரித்துறையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பும்.


 
 
சசிகலாவின் உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய பின்னர் அவர்கள் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர். அதன் பின்னர் சிறையில் இருக்கும் சசிகலா, தினகரன் மற்றும் விவேக்குக்குக் கடிதம் அனுப்பியதாகத் தகவல் வெளியானது.
 
இதனையடுத்து சென்னை பெசன்ட் நகரிலுள்ள தனது இல்லத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார் தினகரன். இந்தக் கூட்டத்தில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோரும் கலந்துகொண்டனர். தினகரனின் இந்த திடீர் அவசர ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

திமுக ஆட்சியை விட துவரம் பருப்பு கொள்முதல் விலை குறைவு.. அரசுக்கு ரூ.187.56 கோடி சேமிப்பு..

தவெக ஆட்சியில் முதல்முறையாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 அறிவிப்பு.. நாளை வெளியாகிறது...

காலாண்டு தேர்வு முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு.. இடைத்தேர்தல் தொகுதிகளில் மட்டும் தாமதம்..

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு.. இன்று விசாரணை...

பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்.. எதிர்த்து வழக்கு.. இன்று விசாரணை.. தடை விதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments