திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 17 நவம்பர் 2017 (09:34 IST)

பன்வாரிலால் ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநர் அல்ல: முட்டுக்கொடுக்கும் சுப்பிரமணியன் சுவாமி!

பன்வாரிலால் ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநர் அல்ல: முட்டுக்கொடுக்கும் சுப்பிரமணியன் சுவாமி!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்தியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேசியுள்ளார்.


 
 
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்தியது வரம்பு மீறிய செயல், மாநில சுயாட்சிக்கு எதிரானது என தமிழகம் முழுவதும் கருத்து நிலவுகிறது. பெரும்பாண்மையான அரசியல் கட்சி தலைவர்கள் ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பன்வாரிலால் புரோகித் போன்ற நேர்மையான ஆளுநர் நாட்டில் கிடையாது. பாஜக எம்பியாக இருந்த பிரமோத் மகாஜன் மீது நீர்ப்பாசன ஊழல் வழக்கு போட்டவர் பன்வாரிலால் என தெரிவித்தார்.
 
மேலும் பான்வாரிலால் புரோஹித் யார் பேச்சையும் கேட்டு நடப்பவர் அல்ல. எனவே, குற்றம் செய்பவர்கள்தான் வீணாக அவரை விமர்சனம் செய்கின்றனர். பன்வாரிலால் ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநர் அல்ல என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.