புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2017 (16:50 IST)

முதல்வரும், அமைச்சரும் அடிமைகள்: அன்புமணி விளாசல்!

முதல்வரும், அமைச்சரும் அடிமைகள்: அன்புமணி விளாசல்!

கோவையில் அதிகாரிகளை அழைத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு நடத்தியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.


 
 
இந்நிலையில் ஆளுநரின் இந்த செயலை வரவேற்கும் அமைச்சர்களை அடிமைகள் என பாமக இளைஞரணி தலைவரும் தர்மபுரி தொகுதி எம்பியுமான அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
 
சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த போது இது தொடர்பாக பேசிய அவர், எந்த அதிகாரியையும் அழைத்து ஆளுநர் பேசலாம். முதல்வர், தலைமை செயலாளரையும் ராஜ் பவனில் அழைத்து பேசலாம். இந்த அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. ஆனால் அன்றாட நிர்வாகம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
 
ஆளுநர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு நடத்துவது ஜனநாயக மரபல்ல. அவருக்கு அந்த அதிகாரம் சட்டத்தில் இல்லை. தமிழக முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் பிரதமர் மோடியின் அடிமைகளாக இருக்கின்றனர். அதனால் தான் இதனை ஆதரித்து பேசுகின்றனர். ஆளுநர் நடவடிக்கை தொடர்பாக சூழ்நிலை ஏற்பட்டால் அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து ஜனாதிபதியை சந்தித்து முறையிடலாம் என்றார்.