வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (08:40 IST)

கேபிள் டிவி விலை குறைப்பில் மோதல்? எடப்பாடி கோபத்தின் காரணம் என்ன?

தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் திடீரென பதவியில் இருந்து தூக்கப்பட்டதற்கான காரணம் என்னவென தெரிய வந்துள்ளது. 
 
தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் நீக்கப்பட்டார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையை ஏற்று அமைச்சரவையில் இருந்து மணிகண்டனை நீக்கி ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
எத்தனையோ பிரச்சனைகளில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் பழனிச்சாமி, மணிகண்டன் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தற்கான காரணம் என்னவென தெரியவந்துள்ளது. சமீபத்தில் கேபிள் கட்டணத்தை 130 ரூபாயாக அரசு குறைத்தது. 
இது குறித்து மணிகண்டனிடம் கேட்ட போது கேபிள் கட்டணதை குறைப்பது பற்றி தன்னிடம் முதல்வர் எதுவும் விவாதிக்கவில்லை. கட்டண குறைவு பற்றி எனக்கு எதுவும் தெரியாது என பதிலளித்தார். 
 
அதோடு, அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக இருக்கும் உடுமலை ராதாகிருஷ்ணன் தன்னிடம் உள்ள 2 லட்சம் கேபிள் இணைப்புகளை அரசு கேபிள் நிறுவனத்தில் இணைப்பாரா? என கேட்டுள்ளார். 
மணிகண்டனின் இந்த பேச்சால் கடுப்பாகித்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரை பதவியில் இருந்து நீக்கியதாக தெரிகிறது. அதோடு, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.