ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 மே 2023 (20:23 IST)

7 ஆயிரம் நெல் மூட்டைகள் உண்மையிலேயே காணாமல் போனதா? -டிடிவி. தினகரன் டுவீட்

‘’7 ஆயிரம் நெல் மூட்டைகள் உண்மையிலேயே காணாமல் போனதா அல்லது கொள்ளையடிக்கப்பட்டதா என்பதை கண்டறிய முதலமைச்சர்  உரிய விசாரணை நடத்த உத்தரவிட   வேண்டுமென்று’’ அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’தருமபுரியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சேமித்து வைக்கப்பட்ட 7,000 நெல்மூட்டைகள் மாயமானதாக வந்த ரகசிய தகவல் அடிப்படையில் சோதனை செய்த விஜிலென்ஸ் அதிகாரிகள் நெல்மூட்டைகள் மாயமானதை உறுதி செய்துள்ளதாக வரும் தகவல்கள்  அதிர்ச்சியளிக்கிறது.

இந்த தகவலை மறுக்கும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், 7 ஆயிரம் நெல் மூட்டைகள் இருக்கின்றன என்பதையும் உறுதி செய்ய இயலவில்லை என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

கொள்முதல் செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை மிகவும் அலட்சியமாக திறந்தவெளி குடோனில் சேமித்து வைத்தது மட்டுமின்றி அவற்றை பாதுகாக்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது இதன் மூலம் வெட்டவெளிச்சமாகிறது.

7 ஆயிரம் நெல் மூட்டைகள் உண்மையிலேயே காணாமல் போனதா அல்லது கொள்ளையடிக்கப்பட்டதா என்பதை கண்டறிய முதலமைச்சர்  உரிய விசாரணை நடத்த உத்தரவிடவும் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.