1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 4 மார்ச் 2023 (23:11 IST)

வெளிமாநில தொழிலாளர் பிரச்னை:தி.மு.க. அரசு காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை- டிடிவி. தினகரன் டுவீட்

ttv dinakaran
வெளிமாநில தொழிலாளர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருப்பது, அவர்களை தமிழக அரசு வரன்முறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது  என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் வடமாநிலத் தொழிலாளர்கள் வந்துகொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வேலை செய்துவரும் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விசாரிக்க பீகாரில் இருந்து 4 அதிகாரிகள் தமிழ் நாட்டிற்கு அனுப்பியுள்ளார் அம்மா நில முதல்வர் நிதிஸ்குமார்.

இதுகுறித்து, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், ‘’வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என’’ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பத்திரிக்கைகளின் இந்த வதந்தி பரப்பியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், ''வெளிமாநில தொழிலாளர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருப்பது, அவர்களை தமிழக அரசு வரன்முறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே நாம் வலியுறுத்தியிருந்தோம்.

ஆனால், அதனை தி.மு.க. அரசு காதில்வாங்கிக்கொள்ளவே இல்லை. அதனால்தான் இந்த விவகாரம் மாநிலங்களுக்கிடையேயான பிரச்னையாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகாவது, வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னையில் தி.மு.க. அரசு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணவேண்டும் என வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.