Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தர்மயுத்தம் செய்கிறாரா ஓபிஎஸ்? பரபரப்பு தகவல்

Written By siva
Updated: புதன், 30 செப்டம்பர் 2020 (07:51 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் முதல்வர் பதவியை ஏற்ற துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் திடீரென சசிகலாவின் அழுத்தம் காரணமாக பதவியை ராஜினாமா செய்து விட்டு அதன் பின் திடீரென ஜெயலலிதா சமாதியில் உட்கார்ந்து தர்மயுத்தம் செய்தார். அவருடைய தர்மயுத்தம் காரணமாகவே சசிகலா முதல்வர் பதவியை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டது
 
அதன் பின்னர் சசிகலா சிறைக்கு சென்றபின்னர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடன் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி கொண்ட ஒபிஎஸ் துணை முதல்வர் பதவியை ஏற்று அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த பிரச்சனை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே இருந்து வந்தது. சமீபத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் உச்ச கட்டத்தை அடைந்தது
 
இதனை அடுத்து அக்டோபர் 7 ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அனேகமாக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் முதல்வர் ஈபிஎஸ் மீது துணை முதல்வர் ஓபிஎஸ் அதிருப்தியில் இருப்பதாகவும் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் ஜெயலலிதா சமாதியில் தர்ம யுத்தம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது 
 
ஓபிஎஸ் அவர்களுக்கு பாஜகவின் ஆதரவு பின்னணியில் இருப்பதால் அவர் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று கூறப்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

எல்லாம் காட்டு

சென்னையில் 750 புதிய மின்சார பேருந்துகள் சேவை!.. துவக்கி வைத்த முதல்வர்!..

10 ரூபாய்க்கு கூலி வேலை பார்த்த சிறுவன்.. பல வருடங்களுக்கு பின் இன்று ரூ.ரூ.681க்கு முதலாளி..

12ஆம் வகுப்பு படித்த நானும், பாஸ்டன் பல்கலைக்கழக CJP திப்கேவும்.. ஆங்கில அறிவை ஒப்பிட்ட கங்கனா...

மீண்டும் டெல்லியில் போராட்டம்.. கரப்பான்பூச்சி அறிவிப்பு.. இந்த முறை யார் ராஜினாமா செய்யனும்..?

பெண் போலீஸ் அதிகாரியை கன்னத்தில் அறைந்த பாஜக எம்.எல்.ஏ மகள்.. அதன்பின் நடந்தது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments