செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2023 (13:01 IST)

’டேனி’ போல ஊடுறுவும் வெளிநாட்டு கடத்தல்காரர்கள்! – ‘சிங்கமாக’ நடவடிக்கை எடுக்கும் டிஜிபி!

Sylendra Babu
தமிழ்நாட்டிற்குள் வெளிநாட்டு போதைபொருள் கடத்தல்காரர்கள் ஊடுறுவிய நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

சிங்கம் திரைப்படத்தில் டேனி என்ற கடத்தல்காரன் தமிழ்நாட்டிற்கு நுழையும்போது அவனை தமிழ்நாடு போலீஸார் பிடிப்பதாக ஒரு காட்சி இருக்கும். சமீப காலமாக இதுபோல வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சமீப காலமாக தமிழ்நாட்டிற்குள் ஊடுறுவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இவ்வாறான ஊடுறுவல் ஆசாமிகளை கைது செய்தும் வருகின்றனர்

இதுகுறித்து சமீபத்தில் புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய டி.ஜி.பி சைலேந்திரபாபு “போதை பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



கஞ்சா வேட்டை இதுவரை 3 பகுதிகளாக நடத்தப்பட்டு ஏராளமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் சில வெளிநாட்டினரும் உள்ளனர். மீண்டும் ஒரு சிலர் ஊடுறுவியிருக்கலாம் என்று கூறப்படுவதால் விசாரணை நடந்து வருகிறது.


வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் தமிழ்நாட்டிற்கு வந்திருப்பது தெரிய வந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தீவிரவாத தடுப்பு பிரிவின் செயல்பாடுகள், சமீபத்தில் பெண் காவலரிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் மீது எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசினார்.

Edit By Prasanth.K