1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2019 (18:25 IST)

சொத்துவரி உயர்வு நிறுத்தி வைப்பு : பழைய வரி கட்டினால் போதும் !

தமிழகத்தில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் , உரிமையாளர்கள் பழைய வரியை செலுத்தலாம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.சொத்து வரி உயர்வு தொடர்பாக மறுபரிசீலனை செய்ததற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்தக் குழுவில், நிதித்துறை முதன்மைச் செயலர், நிர்வாக ஆனையர், பேரூராட்சி இயக்குநர் மற்றும் மாநகர ஆணையர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 
இக்குழிவினர் மறு பரிசீலனை செய்து அறிக்கை அனுப்பும்வரை பழைய சொத்து வரி செலுத்தலாம்.சொத்து உரிமையாளர்கள் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முந்தைய சொத்து வரியை செலுத்தினால் போதும் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், உயர்த்தப்பட்ட விகிதத்தின்படி சொத்து வரி செலுத்தியவர்களுக்கு கூடுதலாக செலுத்தப்பட்ட வரித்தொகையானது அடுத்தவருடம் ஈடுசெய்யப்படும் 1998 ஆம்  ஆண்டுக்குப் பிறகு சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்படவில்லை. என தெரிவித்தார்.