ரேசன் கார்டு : சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றலாம் - முதல்வர் உத்தரவு
நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் வகையில், அரசு, பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அந்ததந்த ஊர்களில் ரேசன் கடைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதன் வாயிலாக மக்கள் அரசி, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை பெற்று வருகின்றனர்.
அதில், பச்சை கார்டு, வெளிறியது போன்ற வெள்ளைக் கார்டு, என பல வகைகளில் உள்ளது, இந்தக் கார்டுகளில் பச்சைக் கார்டு உள்ளவர்கள் அனைத்து வகையிலான பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
வெள்ளைக்கார்டு கொண்டவர்கள், சர்க்கரை மட்டும் பெற்றுவந்தனர். இந்நிலையில், இன்று, தமிழக அரசு சர்க்கரை அட்டை கொண்டவர்களை அதை அரிசி அட்டைகளாக மாற்றலாம் என அரசு தெரிவித்துள்ளது.
பொது விநியோகத் திட்டத்தில் தற்போது, 10, 19, 491 சர்க்கரை குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், சர்க்கரை அட்டைதாரர்கள், அரிசி அட்டைகளாக மாற்ற விரும்பினால்,நவம்பர் 26 முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் விண்ணபிக்க www.tnpds,gov.in ல் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.