புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (09:18 IST)

கம்பரை புகழ்ந்தா போதுமா? சிலை ஒன்னு வைங்க! – பிரதமருக்கு கோரிக்கை!

நேற்று ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கம்பர் குறித்து பிரதமர் பேசிய நிலையில் கம்பருக்கு சிலை எழுப்ப கோரிக்கைகள் எழுந்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அடிக்கல் நட்டு வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தமிழில் கம்ப ராமாயணம் உள்ளது போல உலகில் பல்வேறு ராமாயணங்கள் உள்ளன என தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ் அறிஞர் மறைமலை இலக்குவனார் என்பவர் பிரதமர் மோடிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “ராமயணத்தில் வால்மீகி ராமரை சிறந்த மனிதர் என்ற அளவிலேயே புகழ்ந்திருந்தார். ஆனால் கம்பரோ ராமரை பெரும் லட்சிய மனிதராக போற்றியுள்ளார். எனவே மகாகவி கம்பருக்கு ராமர் கோவில் வளாகத்தில் சிலை அவருக்கு பெருமையளிப்பதாக இருக்கும்”என கேட்டுக்கொண்டுள்ளார்.