செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 22 பிப்ரவரி 2024 (07:01 IST)

டெல்லி சலோ போராட்டத்தில் 3 பேர் உயிரிழப்பு.. போராட்டத்தை ஒத்தி வைத்த விவசாயிகள்..!

டெல்லி சலோ போராட்டத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்ததால் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்ததாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற போராட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு விவசாயிகள் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு விவசாயி கூட்டம் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக தெரிகிறது.

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் தற்காலிகமாக சில நாட்களுக்கு போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி மத்திய அரசு நான்காம் கட்ட பேச்சு வார்த்தைக்கு விவசாயிகளை அழைத்து உள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
எனவே இந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட போராட்டம் முடிவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva