1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2024 (17:45 IST)

டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகள் மீது தாக்குதல்..! எல்லையில் நீடிக்கும் பதற்றம்..!!

protest
டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.
 
கடந்த 2020ம் ஆண்டு 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்தது. அதன்பேரில் போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்றனர். 
 
சுமார் 4 ஆண்டாகியும் எந்த வாக்குறுதியையும் மத்திய அரசு  நிறைவேற்றாத நிலையில், 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள், தலைநகர் டெல்லியை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
Delhi Protest
டிராக்டர்களில் டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகளை தடுப்பதற்காக, சாலைகளில் ஆணிகள், முள் வேலி தடுப்பு, கான்கிரீட் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தது.

 
இந்நிலையில் டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி, தடியடி நடத்தி உள்ளனர். இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளதால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.