வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (16:58 IST)

கருணாநிதி மீதான அவதூறு வழக்குகள் முடித்து வைப்பு...

திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை மரணமடைந்தார். அவரின் உடல் நேற்று மாலை சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுகவினர் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் கருணாநிதி தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்கலுக்கு முன்னர் அவருக்கு உடல்நிலை மோசமான காரணத்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்தும் நேற்று முந்தினம் மரணமடைந்தார். இவரது மரணத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்தும், இவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். 
 
இந்நிலையில், கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகள் இன்று முடித்து வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளையும் சென்னை முதன்மை நீதிமன்றம் முடித்து வைத்தது. 
 
2011 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதிக்கு எதிராக தமிழக அரசு 13 அவதூறு வழக்குகள் தொடர்ந்து. அவை அனைத்தும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது நிலுவையில் இருக்கும் இன்னும் சில வழக்குகள் முடித்து வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.