1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 15 ஜூலை 2017 (05:47 IST)

சசிகலாவுக்கு சலுகையா? கர்நாடக முதல்வரை சந்திப்பேன்: தீபா

சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து சசிகலா சிறையில் பல்வேறு சலுகைகளை பெற்று வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஐபிஎஸ் அதிகாரி ரூபா தெரிவித்த தகவல்கள் இரு மாநிலங்களிலும் புயலை கிளப்பியுள்ளது.



 
 
இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். தவறு செய்த சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தேவைப்பட்டால் கர்நாடக முதல்வரை சந்தித்து மனு அளிக்கவுள்ளதாகவும் நேற்று தீபா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
மேலும் உண்மையான அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் தான் இருப்பதாகவும், விரைவில் இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக தலைமை அலுவலகத்தையும் கைப்பற்றுவேன் என்றும் அவர் கூறினார்.