வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 7 டிசம்பர் 2019 (18:58 IST)

உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் நீதிமன்றத்தை நாட முடிவு - மு.க. ஸ்டாலின்

புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநில தேர்தல்  ஆணையத்துக்கு மு.க ஸ்டாலின் கண்டம் தெரிவித்து, புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன்பு அரசியல் கட்சிகளை அழைத்து  ஆலோசனை நடத்தவில்லை அதனால் உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் அறிவிப்பு குறித்து ஸ்டாலின் கூறியுள்ளதாவது ;
 
அதிமுக அரசின் கைப்பிள்ளையாக மாநில தேர்தல் ஆணையர் மாறியுள்ளது ஜனநாயகத்துக்கு வெட்கட் கேடு. நேர்மையான, சுதந்திரமான தேர்தல் என்ற உயர்ந்த நோக்கங்களை கேலிக்கூத்தாக்கியுள்ளார்கள்.
 
மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணிக்கும் வகையில் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.