வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 15 நவம்பர் 2018 (18:54 IST)

’டாடி மம்மி வீட்டில் இல்ல’ : விஜய் பாடலைச் சொல்லி அமைச்சர் சாடல் !

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒரு மேடையில்  பேசும்போது தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.காலத்தில் நல்ல கருத்துள்ள பாடல்கள் வந்தன. ஆனால்  இப்போது ’டாடி மம்மி வீட்டில் இல்ல’ போன்ற பாடல்கள் வெளிவருகின்றன என்று கூறியிருந்தார்.

அமைச்சர் பேசியதற்கு பாடலாசிரியர் விவேகா கூறியதாவது:
 
’நான் இந்தப் பாடலை எழுதி ஒன்பது வருடங்கள் ஆகிறது. ரசிகர்களின் மனநிலையை அறிந்துள்ளேன். அமைச்சர் இப்பாடலை மூன்று மூறை குறிப்பிட்டுள்ளார். அதனால் அமைச்சர் இப்பாடலின் ரசிகரோ..’இவ்வாறு கூறியிருக்கிறார்.
 
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்தில் அதிமுக அரசை விமர்சித்ததற்கு பதிலடியாக அமைச்சர் இவ்வாறு கூறிவருகிறாரோ என விமர்சகர்கள் கருதுகிறார்கள்.