செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

முடி உதிர்வை தடுக்கும் எளிய வீட்டு வைத்திய முறைகள்....!

இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும்.
கூந்தல் உதிரும் பிரச்னை உடைய பெண்கள், சிறிதளவு வெந்தயத்தை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்ய, கூந்தல் உதிர்வது மட்டுப்படும்.
 
ஆலிவ் ஆயில் பயன்படுத்தி முறையாக மசாஜ் செய்தால், அது கூந்தலை வலுப்படுத்துவதுடன், கூந்தல் உதிர்வு மற்றும் முடி நரைத்தல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
 
இது பொடுகை நீக்கும் இயற்கையான தீர்வாகவும் அமைகிறது. ஆலிவ் ஆயிலுடன் சம அளவு பாதாம் எண்ணெய் அல்லது ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றை கலந்தும் பயன்படுத்தலாம். இதுவும் கூந்தல் பராமரிப்பிற்கு சிறந்ததாக கருதப்படுகிறது.
 
புதிதாக காய்ச்சப் பட்ட பசும்பாலால் தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும். பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர, நாளடைவில் கூந்தல் உதிர்தல் குறைந்து விடும். இதேபோல் பிரஷ் கிரீம் அல்லது வெண்ணெய் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.
 
கூந்தல் உதிர்தல் பிரச்னைக்கு பூண்டு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பூண்டு ஆயில் மற்றும் பூண்டு சாறு ஆகியவற்றால் தலையில் நன்கு மசாஜ் செய்து வந்தால் கூந்தலின் அடர்த்தி அதிகரிக்கும். உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது கூந்தல் வளர்ச்சிக்கு துணை புரியும்.