செவ்வாய், 15 ஜூலை 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (14:05 IST)

10G இண்டர்நெட் அறிமுகம் செய்த சீனா.. இந்தியாவில் இதெல்லாம் எப்போது வரும்?

இந்தியாவில் இன்னும் 5G நெட்வொர்க் முழுமையாக விரிவடையவில்லை என்று பேசிக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலான பகுதிகளில் 3G, 4G வசதியே கிடைக்காத நிலையில் சீனா 10G இணைய சேவையை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
சீனாவின் ஹெபே மாகாணம், சுனான் மாவட்டத்தில் ஹுவாய் மற்றும் சீனா யூனிகோம் நிறுவனங்கள் இணைந்து, 50G PON தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 10G பிராட்பேண்டை செயல்படுத்தியுள்ளன. இதில் 9,800 Mbpsக்கும் அதிகமான டவுன்லோட் வேகம், 1,000 Mbps அப்லோட் வேகம் எனக் கூறப்படுகிறது. வெறும் 2 நொடிகளில் ஒரு திரைப்படத்தை டவுன்லோடு செய்ய முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
 
இத்தகைய நவீன இணையம், 8K வீடியோக்கள், கிளவுட் கேமிங், ஏஐ உள்நிறைந்த ஸ்மார்ட் ஹோம்கள், தொலை மருத்துவம் போன்ற உயர்நுட்ப சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
 
இந்தியாவும் பின்னோக்கி இல்லை. பிரதமர் மோடி அறிவித்த 6G திட்டத்தின்படி, 2030ற்குள் இந்தியாவை 6G முன்நிலைக்குக் கொண்டு செல்ல முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது. இதற்காக Bharat 6G Alliance எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
 
தற்போது இணைய வேகத்தில் இந்தியா சற்றுப் பின்தங்கியிருந்தாலும், 6G யுகத்தை நோக்கி எடுக்கப்படும் திட்டமிடல், இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை உறுதி செய்கிறது.
 
Edited by Siva