செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2024 (16:38 IST)

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

வங்கக் கடலில் உருவான ஃபெங்கல் என்ற புயல், எப்போது மற்றும் எங்கு கரையை கடக்கும் என்பது இதுவரை கணிக்கப்படவில்லை என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான ஃபெங்கல் புயல், வலுவடைந்து 29ஆம் தேதி வரை கடற்கரைக்கு இணையாக 150 முதல் 250 கிலோமீட்டர் தொலைவில் நகரும் என்று அவர் கூறினார். தற்போது புயல், சுமார் 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும், நாளை புயலாக வலுவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புயலுக்கு ஃபெங்கல் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இப்பொழுது, திரிகோணமலையிலிருந்து தென்கே தென்கிழக்கு 310 கிலோமீட்டர் தொலைவில் மற்றும் சென்னை தெற்கு தென்கிழக்கு 800 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக புயல் வலுவடையும் என்றாலும், எப்போது மற்றும் எங்கு கரையை கடக்கும் என்பது இதுவரை உறுதியாக கணிக்க முடியவில்லை என்றும் 29ஆம் தேதிக்கு பின்னரே புயலின் தன்மை தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.


Edited by Mahendran