வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2021 (17:07 IST)

தலைமுடி சுருட்டைதான்...பணத்தை சுருட்டியது அல்ல...கறுப்பு பணமில்லை - கவர்னர் தமிழிசை

தமிழக பாஜகவிலுள்ள தலைவர்களில் மக்களுக்கு அதிகம் பரீட்சயமானவர் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்.

அவர் தெலுங்கானா மாநில கவர்னராக இருந்தாலும் அவ்வப்போதும் தமிழக மக்கள் பண்டிகைகள், விழாக்கள் முக்கிய நிகழ்வுகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது :

16 வயதிலே படத்தில் ரஜினிக்குப் பிறகு பரட்டை என பெயர் எடுத்தது நான் தான் போல.  என் தலை பரட்டை தலை, கருப்பு, என பல விமர்சனங்களை நான் எதிர்கொண்டிருக்கிறேன்.

எனக்கு தலையில் சுருட்டை முடிதான். ஆனால் யாருடைய பணத்தையும் சுருட்டியது அல்ல; நான் கருப்பு நிறம்தான் ஆனால் கையில் கருப்புப் பணம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.


தன் உழைப்பு திறமையால், இந்தியாவில் உள்ள உயர்ந்த பதவி வகித்து, தமிழகத்திற்கு பெருமை சேர்ந்த்தவர்களில் தமிழிசை சவுந்தரராஜனும் ஒருவர்.எனவே அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.