செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 6 ஜூலை 2024 (18:13 IST)

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

நேற்று இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட  பதட்டமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது பாமக பிரமுகர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூரில் பாமக பிரமுகர் சிவசங்கர் என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கடலூர் சேர்ந்த பாமக பிரமுகர் சிவசங்கர் மீது  4 பேர் கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக  முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 பாமக பிரமுகர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் பதட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடலூர் சூரப்ப நாயக்கன்பட்டி சாவடி பகுதியில் வசித்து  வருபவர் பாமகவை சேர்ந்த சிவசங்கர்.  இவர் மீது நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியதாகவும் அதன்பின் மாயமாய் தப்பியோடி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நான் உயிருக்கு போராடி வரும் சிவசங்கரின் ஆதரவாளர்கள் மருத்துவமனையில் குவிந்து வருவதால் அந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பக்கம் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கடலூரில் பாமக பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவமும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran