1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2024 (14:21 IST)

மாநகராட்சி வரி செலுத்தாததால் கல்லூரி அலுவலகத்திற்கு சீல்.. கடலூரில் பரபரப்பு..!

கடலூர் மாவட்டம் செமண்டலம் பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் கல்லூரியின் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கல்லூரி மாநகராட்சி வரி செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
கடலூர் மாவட்டம் செமண்டலம் பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் கல்லூரி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.36 லட்சம் வரியை கட்டவில்லை என தெரிகிறது. வரி பாக்கியால் மாநகராட்சி அதிகாரிகள்  கல்லூரி அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
 
சென்னை பச்சையப்பன் அறக்கட்டளைக்கு கீழ் இந்த கல்லூரி செயல்பட்டு வரும் நிலையில் வரி பாக்கிக்காக கல்லூரியின் முதல்வர் அறை மற்றும் அலுவலகத்திற்கு சீல் அதிகாரிகள் வைத்ததால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அடுத்த வாரம் செமஸ்டர் தேர்வுகளும், செயல்முறை தேர்வுகளும் நடைபெற உள்ள நிலையில் கல்லூரி அலுவலகம் சீல்  ஊழியர்கள் வெளியே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran