திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 27 மே 2023 (12:28 IST)

சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் 2வது நாளாக ஐடி ரெய்டு: கரூரில் பரபரப்பு..!

சென்னை கரூர் கோவை உள்பட நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்தது. அப்போது சில இடங்களில் திமுகவினர் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்பட்டது. 
 
மேலும் உள்ளூர் போலீசார் தகுந்த பாதுகாப்பு வருமானவரித்துறை அலுவலர்களுக்கு கொடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த நிலையில் கரூர் காந்திகிராம் பகுதியில் உள்ள பிரேம்குமார் என்றாவது வீட்டில் இன்று இரண்டாவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 
 
இந்த சோதனைக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran