திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 27 மே 2023 (10:34 IST)

நெல்லையில் பல் பிடுங்கிய விவகாரம்: காத்திருப்போர் பட்டியலில் இருந்தோருக்கு மீண்டும் பணி..!

நெல்லையில் விசாரணை கைதியின் பல் பிடுங்கி விவகாரம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் தற்போது காத்திருப்போர் பட்டியலில் இருந்து அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை புடுங்கியதாக காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. 
 
கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளராக இருந்த ராஜகுமாரி, குற்றாலம் காவல் ஆய்வாளராகவும், விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளராக இருந்த பெருமாள் மணவாளக்குறிச்சி வட்டத்தின் ஆய்வாளராகவும் உளவு பிரிவு காவல் ஆய்வாளராக இருந்த கோமதி, மார்தாண்டம் காவல் ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran