செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 8 அக்டோபர் 2022 (14:57 IST)

சாலை போடாமலேயே தி.மு.க ஆட்சியில் கோடிக்கணக்கில் பணம் கையாடல்- டிடிவி தினகரன் டுவீட்

கரூரில் சாலை போடாமலேயே தி.மு.க ஆட்சியில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் வெளியாகியிருக்கும் புதிய ஆதாரங்கள் குறித்து, முதலமைச்சர் திரு.ஸ்டாலினும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும் உரிய விளக்கம் அளிப்பார்களா?    என அமமுக பொதுச்செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கரூரில் சாலை போடாமலேயே தி.மு.க ஆட்சியில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் வெளியாகியிருக்கும் புதிய ஆதாரங்கள் குறித்து, முதலமைச்சர் திரு.ஸ்டாலினும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும் உரிய விளக்கம் அளிப்பார்களா?

அதுமட்டுமில்லாமல் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனத்திற்கே 100 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது தி.மு.க ஆட்சியில் எந்த அளவிற்கு ஊழல் மலிந்து போயிருக்கிறது என்பதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது.

‘சர்க்காரியா புகழ்’ தி.மு.க.வினர் கரூரில் சாலை போடாமலேயே மக்கள் பணத்தை  சுரண்டியதைப் போல இன்னும் என்னென்ன திருவிளையாடல்களை அரங்கேற்றுகிறார்களோ?!  எனத் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj