திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (11:22 IST)

திடீரென கோடிக்கணக்கில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்?

கடந்த சில நாட்களாக வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் திடீர் திடீரென கோடி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் நிகழ்வுகள் தொடர்கதை ஆகி வருகிறது 
 
சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் வங்கி கணக்கில் 7000 கோடி வந்த நிலையில், தஞ்சையை சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் மற்றும் சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த பார்மசி ஊழியர் ஆகியோர்களை வங்கி கணக்கிலும் கோடிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் திடீரென தங்களது வங்கி கணக்கில் கோடி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழகப் பிரிவு உதவி தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார், அவர் கூறியிருப்பதாவது
 
மத்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, ஒரு வாடிக்கையாளர் தனது கணக்கில் இருந்து வேறொரு கணக்குக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டால், அதுகுறித்த விவரத்தை வாடிக்கையாளர் தனது வங்கியிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அதே சமயம், வங்கித் தரப்பில் இருந்து இவ்வளவு பெரிய தொகை ஒரு வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைப்பதை கண்டுபிடிக்க ரிசர்வ் வங்கி எந்த விதிமுறைகளையும் வகுக்கவில்லை.
 
எனவே, இத்தகைய தவறுகள் நடந்தால் ரிசர்வ் வங்கி சம்மந்தப்பட்ட வங்கியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், இவ்வாறு தவறு நிகழும் போது சம்மந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு எதிர்காலத்தில் வருமானவரி துறை அல்லது வேறு ஏதாவது துறைகள் மூலமாகபிரச்சினை வராமல் தடுக்க சம்மந்தப்பட்ட வங்கியில் இருந்து தவறுக்கான காரணத்தை விளக்கி சான்றிதழ் தர வேண்டும். அதேபோல், வங்கிகளின் இணையதள தொழில்நுட்பத்தை பாதுகாப்பாக கையாளும் வகையில் வலுப்படுத்த வேண்டும். மேலும், போதிய அளவுக்கு ஊழியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
 
Edited by Siva