இரட்டைத் தலையுடன் பிறந்த கன்று… ஆச்சர்யத்தில் மக்கள்!

Last Updated: புதன், 3 மார்ச் 2021 (16:22 IST)

கயத்தாறு அருகே ஒரு பசு இரட்டைத் தலையுடன் காளை கன்று ஈன்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த வடக்கு இழந்தைகுளம் பகுதியை சேர்ந்தவர் அய்யாதுரை.
விவசாயியான இவர் வீட்டில் பசுக்களை வளர்த்து வந்துள்ளார். அதில் ஒரு பசு சில தினங்களுக்கு முன்னர் கன்று ஈன்றது. அந்த கன்று இரட்டைத் தலையுடன் பிறந்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கால்நடை மருத்துவர் அந்த கன்றை பரிசோதித்து நலமுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அதிசயக் கன்றை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :