செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 ஜனவரி 2021 (13:44 IST)

அதை சாப்பிட்டதும் வயித்தை கலக்கிடுச்சு! வறட்டிக்கு ரிவ்யூ எழுதிய நபர்! – இணையத்தில் வைரல்!

அமேசானில் விற்ற மாட்டு சாணத்தை நபர் ஒருவர் வாங்கி சாப்பிட்டு ரிவ்யூ எழுதிய சம்பவம் வைரலாகி வருகிறது.

அமேசானில் பலவகையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சிலசமயம் குதர்க்கமான சில பொருட்களின் விற்பனையால் சர்ச்சைகளும் ஏற்படுவது உண்டு. அவ்வாறாக அமேசானில் மாட்டு சாணம் உள்ளிட்டவை விற்பனைக்கு வருவது கிண்டலாக பலரால் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் அமேசானில் விற்ற மாட்டு சாண வறட்டியை வாங்கிய நபர் ஒருவர் அதை சாப்பிட்டு பார்த்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் “இதை நான் சாப்பிடபோது மோசமான சுவையாக இருந்தது. புல் வாடையும், அழுகிய வாடையும் வீசியது. இதனால் எனக்கு பேதி தொல்லையும் ஏற்பட்டது. இனிமேல் இதை தயாரிக்கும்போது சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்குமாறு சுகாதாரமாக செய்யுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

அமேசான் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஸ்க்ரீன்ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.