வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (14:14 IST)

பழனி அருகே 6 கால்களுடன் பிறந்த பசுங்கன்று.. அதிசயமாக பார்த்து செல்லும் கிராம மக்கள்..!

பழனி அருகே 6 கால்களுடன் பிறந்த பசுங்கன்றை அதிசயமாக பார்க்க கிராம மக்கள் குவிந்து வருகின்றனர்.
 
பழனி அருகே தும்பல பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் விவசாயத்துடன் ஆடு மாடு வளர்ப்பையும் தொழிலாக செய்து வருகிறார். இந்நிலையில் சக்திவேல் வளர்த்த பசுமாடு இன்று கன்று ஈன்றது. ஆனால் கன்று ஈனுவதற்கு பசுமாடு சிரமப்பட்ட நிலையில் சக்திவேல் கால்நடை மருத்துவர் அழைத்துள்ளார்
 
வண்ணப்பட்டி கால்நடை மருத்துவமனை மருத்துவ உதவியாளர் உடனடியாக வந்து பசு மாட்டிற்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளித்துள்ளார். சிறிது நேரத்தில் பசுமாடு ஆறு கால்களுடன் கூடிய கன்றை ஈன்றது.
 
ஆனால் வழக்கமாக நான்கு கால்களுடன் இருக்கக்கூடிய பசுங்கன்று ஆறு கால்களுடன் பிறந்ததால் கிராம மக்கள் அதிசய கன்று குட்டியை அவருடன் பார்வையிட்டு சென்றனர். இதுகுறித்து  பழனி கால்நடைதுறை உதவி இயக்குனர் சுரேஷ் கூறியபோது, ‘ மரபணு குறைபாடு காரணமாக இதுபோன்று சில சமயங்களில் கன்றுகள் பிறப்பதாக தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran