போராட்டம் நடத்திய முக ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றம்!
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்ற குடியுரிமையை சீர்திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தால் சென்னையே குலுங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டத்திற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட இந்தியாவின் பல முக்கிய தலைவர்கள் ஆதரவு கொடுத்தனர்
இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு நடத்திய முக ஸ்டாலின் தலைமையில் நடந்த போராட்டம் குறித்த வழக்கில் ஆஜராக முக ஸ்டாலின் உள்ளிட்ட ஏழு பேர்களுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடந்த 2018ஆம் ஆண்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் முக ஸ்டாலின் திருநாவுக்கரசு உள்ளிட்ட 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
டிசம்பர் 26ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் ஏழு பேர்களும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிரது. போராட்டம் நடத்தியதால் முக ஸ்டாலின் உள்ளிட்ட 7 தலைவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது