வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2018 (11:18 IST)

தமிழக அரசு மனு தள்ளுபடி; மணல் குவாரிகளுக்கு தடை தொடரும் - நீதிமன்றம் அதிரடி

6 மாதங்களில் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்கலாம். ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளை இன்று முதல் 6 மாதங்களுக்குள் முழுவதுமாக மூட வேண்டும். தமிழகத்தில் வேறு எந்த மணல் குவாரிகளையும் புதியதாக திறக்க கூடாது. வருங்கால தமிழக சந்ததியின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த நவம்பர் 29ம் தேதி தனி நீதிபதி மகாதேவன் தீர்ப்பளித்தார். 
 
இதையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மதுரை, நெல்லை உள்ளிட்ட 3 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.  இதில், தீர்ப்பளித்த நீதிபதிகள், மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற உத்தரவு தொடரும் என தீர்ப்பளித்ததோடு, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.
 
இதன் மூலம், தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை மூட வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.