செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2018 (17:54 IST)

தினகரன் ஆதரவு வெற்றிவேலின் எம்எல்ஏ வெற்றி செல்லும்: நீதிமன்றம் அதிரடி!

கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் பெரம்பூர் தொகுதியில் வெற்றிபெற்ற வெற்றிவேலின் வெற்றி செல்லாது என தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு அவரது வெற்றி செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதிமுகவின் வெற்றிவேல் 2016-ஆம் ஆண்டு பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக கூட்டணியில் உதயசூரியண் சின்னத்தில் போட்டியிட்ட தனபாலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
வெற்றிவேல் பணம் மற்றும் அதிகார பலத்தை வைத்து இந்த வெற்றியை பெற்றார் என தனபால் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனபாலின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் அந்த வழக்கை தள்ளுபடி செய்து 2016-இல் வெற்றிவேல் பெற்ற வெற்றி செல்லும் என அறிவித்துள்ளது.
 
ஆனால் தற்போது தினகரன் ஆதரவாளராக இருக்கும் வெற்றிவேல் அதிமுக கொறடாவுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.