யூடியூபர் கார்த்திக் கோபிநாத் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்கு மக்களிடம் ரூ.33 லட்சம் நன்கொடை வசூலித்து மோசடி செய்ததாக பிரபல யூடியூபர் கார்த்திக் கோபி நாத் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி யூடியூபர் கார்த்திக் கோபி நாத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தர்.
இதற்கு இடையே, கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரு மனுக்கள் மீதான விசாரணையையும் ஜூன் 13 அம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடடுள்ளது. மேலும், கார்த்திக் கோபி நாத்தின் வங்கிக் கணக்கின் விவரங்களை தாக்கல் செய்ய கார்த்திக் கோபி நாத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.